இன்று ஈஷா யோக மையம் மூடல்!! நாளை முதல் அனுமதி!!

 
ஈஷா யோக மையம்

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுற்றி பார்க்கவும், தியானம் கற்றுக்கொள்ளவும், தீட்சை பெறவும் வருகை தருகின்றனர். அத்துடன் இங்கு அமைந்திருக்கும் தியானலிங்கம் மற்றும் ஆதியோகி சிலையை காண்பதற்கும், தரிசனம் செய்வதற்கும் ஏராளமானோர் வருகை புரிகின்றனர்.

ஈஷா யோக மையம்
முற்றிலும் இயற்கை எழிலோடு காணப்படும் இந்த இடத்தைச் சுற்றிப்பார்க்க சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர்.  இங்கு மன அழுத்தத்தைபோக்கவும், மன அமைதிக்காகவும் ஈஷா யோகா மையத்தில் யோகா கலைகள் கற்றுத் தரப்பட்டு வருகிறது. நில ஆக்கிரமிப்பு என ஈஷாவை சுற்றி பல மர்மங்கள் நிறைந்து இருப்பதாக கூறப்பட்டாலும், இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இங்கு நடைபெறும் மகா சிவராத்திரி உலகப்பிரசித்தி பெற்றது.

ஈஷா யோக மையம்

ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக இந்த விழா நடைபெறுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில்  இதில் கலந்து கொள்ள  அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் போட்டா போட்டி நடக்கும்.  அந்த வகையில் இந்தாண்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டார். ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு பணிகளுக்காக ஈஷா வளாகம் வருடத்தில் ஒரு நாள் மட்டும் மூடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு பராமரிப்பு பணிக்காக  இன்று மூடப்பட்டுள்ளது.  அதன்படிதியானலிங்கம், ஆதியோகி சிலை உள்ள வளாகம் மற்றும் ஈஷாவிற்குள் உள்ள பிற இடங்கள் மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் நாளை வழக்கம் போல் சாமி தரிசனம் செய்யவும் சுற்றிப்பார்க்கவும் தடை எதுவும் இல்லை. மே 31 ம் தேதி நாளை புதன்கிழமை முதல்  பொதுமக்கள் அனைவரும் உள்ளே  வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web