இன்று மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை! கலெக்டர் அதிரடி அறிவிப்பு!

 
உள்ளூர் விடுமுறை

இன்று மே 12ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கோயில் சித்திரைத் தேர் திருவிழா நடைபெறுவதால், இன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதனால், இன்று அரசு ஊழியர்களுக்கும் தேனி மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் நடைபெறும்.

அதே சமயம் இன்றைய விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக மே 27ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவிழாக்களும், கொண்டாட்டங்களுமே மக்களின் அன்றாட பணிகளில் ஏற்படும் அயற்சிகளில் இருந்து மீள வைத்து புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது. சக மனிதர்களோடு பழகவும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் அன்பு செலுத்தவும், மனிதம் காக்கவும் இத்தகைய திருவிழாக்களே உதவுகின்றன. பழந்தமிழர்களின் பண்பாட்டின் நீட்சியாகவே இத்தகைய திருவிழாக்கள் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் உன்னத நோக்கங்களை அறிந்து கடவுள் வழிப்பாட்டோடு, மனிதத்தையும் காப்போம். நாளை தேனி  மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயிலிலுக்கு பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த ஆலயத்தில் வருடாவருடம் சித்திரைத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருட சித்திரைப் பெருந்திருவிழா மே 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், மே 16ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தேனி வீரபாண்டி

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மே 12ம் தேதி வெள்ளிக்கிழமை காலை நடைபெற உள்ளது. சித்திரைத் தேரோட்டத்தை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வர். இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காகவும், பாதுகாப்பு கருதியும் இன்று மே 12ம் தேதி தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி வீரபாண்டி

இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறையினை ஈடு செய்யும் வகையில் வரும் மே27ம் தேதி  சனிக்கிழமை பணிநாளாக செயல்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பினும், அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் அரசு கருவூலங்களும், அனைத்து சார் நிலை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் கலெக்டர் அறிவித்துள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web