இன்று முன்பதிவு டிக்கெட் வெளியீடு... ஜூலை, ஆகஸ்ட் மாத திருப்பதி தரிசனத்துக்கு உடனே முன்பதிவு செய்யுங்க!

 
திருப்பதி திருமலை பெருமாள்

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் திருப்பதி திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான ரூபாய் 300 டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. திருப்பதியில் தற்போது கோடை விடுமுறை நடைப்பெற்று வரும் நிலையில், பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. ஒவ்வொரு மாதமும் ரூ.300 தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்படுகிறது. இந்நிலையில், வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தரிசனத்திற்கான ரூ.300 டிக்கெட்கள் இன்று காலை வெளியிடப்படுகிறது. 

திருப்பதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாத அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் நேற்று வழங்கப்பட்டன. அதே சமயம் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான சிறப்பு இலவச டோக்கன்களும் நேற்று வெளியிடப்பட்டது. 

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்!! திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

இந்நிலையில் இன்று காலை ஜூலை, ஆகஸ்ட்  மாதங்களுக்கான ₹ 300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியாகிறது.  https://tirupatibalaji.ap.gov.in/  என்கிற இணையதள முகவரியில் பக்தர்கல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web