வரலாற்றில் உச்சம்... 1,00,000யைத் தொட்டது வெள்ளி விலை!
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கூடவே வெள்ளியின் விலையும் உயர்ந்து வந்தது. இந்நிலையில், வரலாற்றில் உச்சமாக ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,00,000யைத் தொட்டு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து சவரனுக்கு 55,200 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே போன்று வெள்ளியின் விலையும் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று 96 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரே நாளில் வெள்ளியின் விலை கிராமுக்கு மூன்று ரூபாய் 50 பைசா உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை வரலாற்றில் முதல்முறையாக ஒரு கிராம் வெள்ளி ரூ.100யைத் தொட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
