இன்று செல்வங்களை அள்ளித் தரும் சோமவாரப் பிரதோஷம்... எப்படி வழிபடுவது?!

 
வில்வம் சிவன் சிவபெருமான் பிரதோஷம்

இன்று செல்வங்களை அள்ளித் தரும் சோமாவார பிரதோஷம். அதனால் இன்று மாலை சிவனருளைப் பெற  மறந்துடாதீங்க.  ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்து 13 வது நாளில் வரும் திரையோதசி திதியில் பிரதோஷம் அனுசரிக்கப்படுவதுண்டு. மாதத்திற்கு இருமுறை பிரதோஷம் அதாவது வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷம். பிரதோஷம் எந்த நாளில் வந்த போதிலும் சிறப்பானது தான் என்றபோதிலும் திங்கட்கிழமை  சிவபெருமானுக்குரிய சோமவாரத்தில் வரும் பிரதோஷம் மகத்துவம் வாய்ந்தது.   

இந்நாளில் சிவபெருமானை விரதமிருந்து வழிபட மும்மடங்கு பலன் பெறலாம் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு. வருடத்தின் எல்லா நாளுமே நித்திய பிரதோஷ காலமான மாலை 4.30 முதல் 6 மணி வரை  வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். இதே போல் ஒரு  சோமவாரப் பிரதோஷ காலத்தில்  தான்  தாருகாவனத்து ரிஷிகள் கர்வத்தால் தலைகால் புரியாமல் ஆடிய போது சிவபெருமான் பிட்சாடனராக வந்து பாடம் புகட்டினார் .

பிரதோஷம் சிவன் நந்தி

கர்வத்தைத் தொலைத்த ரிஷிகள், பிரதோஷ நாளில் கடும் தவமிருந்து, விரதம் மேற்கொண்டு சிவ பூஜைகளைச் செய்து முக்தி அடைந்தனர் என்கிறது புராணம். அதனால்தான் பிரதோஷ பூஜை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பிரதோஷ காலத்தில் சிவ தரிசனம் செய்து மனமுருகி பிரார்த்தனை செய்வதால், சகல பாவங்களும் விலகி, சகல செளபாக்கியங்களும் பெற்று புகழோடு வாழலாம் என்பது ஐதிகம். பிரதோஷ நாளில் செய்யப்படும் எந்த தானமும் மும்மடங்குப் பலன்களை அள்ளித் தரும்.

முப்பத்து முக்கோடி தேவர்களும் நந்தியின் கொம்புகளுக்கிடையில் நடைபெறும் சிவநடனத்தைத் தரிசிக்க பூலோகம் வருவார்கள் என்பது நம்பிக்கை. பிரதோஷ பூஜைக்கு நம்மால் இயன்ற அளவு அபிஷேகப் பொருட்களையும்,வில்வம், பூக்களை வழங்கலாம். 

இன்று  மாலை 4.30 லிருந்து 6 மணி வரை சிவாய நம என்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்து, சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ள ஏழுதலைமுறை பாவங்களும் நீங்கப் பெறலாம் என்கிறது சிவபுராணம்.

இன்று சனி பிரதோஷம் விரதம் இருப்பது எப்படி?

மற்ற பிரதோஷ நாட்களில் சிவ தரிசனம் செய்வதைக் காட்டிலும் சோமவாரப் பிரதோஷ நாளில் செய்தால், மும்மடங்கு பலன்களைப் பெறலாம் என்பது ஆச்சார்யப் பெருமக்கள் வாக்கு. இன்று சோமவாரபிரதோஷ நாளில் மாலையில் சிவ தரிசனம் செய்வோம். சிவாய நம சொல்லுவோம். சகல பாவங்களில் இருந்தும் விடுபடலாம்.

இந்த காலத்தில் தான் சிவன், நந்தியின் கொம்புகளுக்கு இடையில் ஆடுகின்றார். இந்த நேரத்தில் அவரின் ஆனந்த தாண்டவத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் கூடி நின்று பக்தி பரவசத்துடன் இந்த பிரதோஷ வேளையில் கண்டுக் களிப்பதாக ஐதிகம்.

பிரதோஷ வேளையான மாலை நேரத்தில் வீட்டில் இருந்த படியே ‘ஓம் நமச்சிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிக்க இதுவரை முன்னேற்றத்தை தடுக்கும் கர்ம வினைகள் அதுவாகவே அகன்று விடுவதை அனுபவ பூர்வமாக உணரலாம்.

இதனால் உடலும், மனமும் ஆரோக்கியமடைகிறது. நம் குடும்பத்தில் அமைதியும்,மகிழ்ச்சியும் பெருகும். நம்மை எதிரிகளாக நினைப்பவர்கள், அவர்களாகவே நமது பாதையிலிருந்து விலகிச் சென்று விடுவார்கள். அதிலும் சுக்கிரவார தினமான இன்று அனுசரிக்கப்படும் பிரதோஷ வழிபாடு சகல செல்வங்களையும் கொண்டு வந்து சேர்த்து, சுக்கிர யோகத்தைத் தரும் என்பது ஐதீகம். பிரதோஷ நேரத்தில் அருகில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை மனமார தரிசித்து உளமாற பிரார்த்தனை செய்து கொண்டால் வாழ்வில் அனைத்து இன்னல்களும் நீங்கி மேன்மை பெறலாம்

தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?