அடி தூள்... நாளை முதல் சுங்கச்சாவடி மூடல்... வாகன ஓட்டிகள் உற்சாகம்..!!

 
சுங்கச்சாவடி

சென்னையில்  மெட்ரோ சேவையை மேம்படுத்தும் விதமாக சென்னை கோடம்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது இது குறித்த  சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடந்து வருவதால் பழைய மகாபலிபுரம் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடியை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி

இதற்காக   தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம் மாநில அரசிடம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் சுங்கச்சாவடியில் பயனர் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.   ஏற்கனவே இந்த  சுங்கச்சாவடியை அகற்றக்கோரி ஓஎம்ஆர் குடியிருப்பு வாசிகள் முதல்வருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர் . அத்துடன்  நாவலூர் சுங்கச்சாவடியில்  கட்டணம் வசூலிப்பதை நிறுத்த உள்ளூர் குடியிருப்போர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இருந்தது. இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு  நிறைவேற்றப்பட இருக்கிறது.

சுங்கச்சாவடி

ஆனால் மெட்ரோ முடிக்கப்படும்போது மீண்டும் இந்த டோல் பிளாசா மீண்டும் திறக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆகஸ்ட் 2021ல் பெருங்குடி, துரைப்பாக்கம், மேடவாக்கம், சோளிங்கநல்லூர் சாலை மற்றும் இ சி ஆர்- ஓ எம் ஆர் இணைப்பு சாலை ஆகிய இடங்களில் உள்ள 4  சுங்கச்சாவடிகள் மெட்ரோ ரயில் பணிகளுக்காக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.  மேலும் தற்போது நாவலூர் சுங்கச்சாவடி மூடப்பட்டால் தினமும் ரூ7 லட்சம்  வரை இழப்பு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web