வரத்து குறைவு... இருமடங்கு எகிறியது தக்காளி விலை... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
புரட்டாசி மாதம் மற்றும் வரத்து குறைவு, தொடர் மழை காரணமாக தக்காளி விலை இருமடங்கு உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சைமிளகாய் என அத்தியாவசியப் பொருட்களின் விலை திடீரென தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை அதிருப்தியடைய செய்துள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக பீன்ஸ், தக்காளி வரத்து குறைந்து வருவதையடுத்து அவைகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் தக்காளி ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.40க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது வரத்து குறைவால் அதன் விலை அதிரடியாக உயர்ந்து உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.60 வரையிலும் வெளிமார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ரூ.70 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் மொத்த விற்பனையில் கடந்த வாரம் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அதன் வரத்து பாதியாக குறைந்துள்ளது.

அவைகளின் விலை இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது. இன்று ஒரு கிலோ பீன்ஸ் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது இது குறித்து தக்காளி மொத்த வியாபாரி ” கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி 60 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே தக்காளியின் வரத்து 45 முதல் 50 லாரிகளாக குறைந்துவிட்டது. இதேபோல் பீன்ஸ் வரத்தும் பாதியாக குறைந்து போனது. இதனால் தக்காளி, பீன்ஸ் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் நாட்களிலும் இதே நிலைதான் நீடிக்கும்” எனக் கூறியுள்ளார். இத்தகவலால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
