அதிகாலையில் அதிர்ச்சி... ரூ.130க்கு எகிறியது தக்காளி விலை!

 
மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

இந்தியா முழுவதுமே  தக்காளி விலை வேகமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை  கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ100ஐ எட்டியுள்ளது. ஜூன் 12ம் தேதி கிலோ ₹20 ஆக இருந்த தக்காளியின் விலை தற்போது வேகமாக உயர்ந்து   கிலோ ரூ100க்கு விற்பனை செய்யப்பட்டது.  நேற்று 100 ரூபாய் விற்கப்பட்ட தக்காளி இன்று மேலும் 20 ரூபாய் உயர்ந்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம்  முதலே தக்காளி விலை ரூ100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் அதிகரித்து   கிலோ ரூ.130 வரை உயர்ந்து விட்டது. இதனால் இல்லத்தரசிகள், நடுத்தர மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை  கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில்   தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

தக்காளி
இது குறித்து அமைச்சர் விடுத்த செய்திக்குறிப்பில்  தமிழக அரசு சார்பில் தக்காளியை குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். சென்னை முழுவதும் 82  ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும்.பின்னர் மாவட்ட வாரியாக  சில ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு   மாநிலம் முழுவதும் இத்திட்டம்   விரிவுப்படுத்தப்படும். அந்த வகையில்    தமிழகம் முழுவதும் மொத்தம் 111 ரேஷன் கடைகளில்  ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டன.  

தொடர் மழை மற்றும் விளைச்சல் குறைப்பு காரணமாக தமிழகத்தில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன் படி கடந்த 4 நாட்களாக தக்காளி கிலோவிற்கு ரூ110வரை விற்பனையாகி வருகிறது.  இந்த திடீர் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது.

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

இதனை மக்கள் வாங்கி சென்றனர். தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார் . இதனையடுத்து நேற்று கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை சற்றே குறைந்து மொத்த விலையில்  கிலோ ரூ.60க்கு   விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனை நிலையங்களில் தக்காளி கிலோவுக்கு ரூ.60ல் இருந்து ரூ.65 வரை விற்பனையானது.    

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web