இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி... சதமடித்த வெங்காயம், தக்காளி!

 
வெங்காயம் தக்காளி

 தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி, வெங்காயம் விலை மிகக்கடுமையாக உயர்ந்து வருகிறது. சைவமோ, அசைவமோ எந்த வகையான சமையலாக இருந்தாலும்  அன்றாட உணவில் தக்காளியின் பங்கு அவசியமானதே.  ஆனால் தற்போதைய நிலவரப்படி தற்போது தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

தக்காளி சின்ன வெங்காயம்

சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கும், பெரிய வெங்காயம் ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து தக்காளி, வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ள தமிழக அரசு, அவற்றை பண்ணை பசுமைக் கடைகள் மூலம் விற்பனை செய்து  வருகிறது.

தக்காளி


தமிழக அரசு எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையில், பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கும், வெங்காயம் ரூ.40க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிலும், ஒருவருக்கு 2 கிலோ மட்டுமே  என அறிவிக்கப்பட்டுள்ளது.  கூட்டுறவு துறையில்  சென்னையில் உள்ள 27 கடைகளில் தக்காளி கிலோ ரூ.49க்கும், வெங்காயம் ரூ.40க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் 5 மாவட்ட விவசாயிகள் தக்காளி பயிரிடுவதற்காக 3 லட்சம் நாற்றுகளுக்கு முன்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!