இல்லத்தரசிகளுக்கு இனிய செய்தி... ஏறிய வேகத்தில் இறங்கிய தக்காளி விலை!

 
மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!
 


 
தமிழகத்திற்கு தேவையான தக்காளியில் பெருமளவு ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு லாரிகளில் கொண்டு வந்து சேர்க்கப்படுகின்றன. சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் கிருஷ்ணகிரி, ஓசூர் இடங்களிலிருந்தும் காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு லாரிகளில் வந்து இறங்குகின்றன.

தக்காளி
 
இங்கிருந்து சில்லறை வியாபாரிகள் வாங்கிச் சென்று கடைகளில் விற்பனை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.  கடந்த ஒரு வாரமாக சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்ததால்  மொத்த விலையில் கிலோ ரூ.12 வரை விற்கப்பட்ட தக்காளி நேற்று கிலோ ரூ.50 ஆக உயர்ந்திருந்தது. வெளிச் சந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது.  

தக்காளி விலை உயர்வு

பருவநிலை மாற்றத்தால் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் தக்காளியின் வரத்து சரிந்து விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 50 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த விலையானது மேலும் உயரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  
இந்நிலையில், திடீரென நேற்று தக்காளி வரத்து அதிகரித்ததை தொடர்ந்து தக்காளி விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி கோயம்பேடு சந்தையில் 50 ரூபாயில் இருந்து 15 ரூபாய் குறைந்து 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி விலை தொடர்ந்து குறையுமா.? அல்லது நாளைய தினமே அதிகரிக்க வாய்ப்புள்ளதா? என்பதை தக்காளி வரத்தை பொறுத்தே கணிக்க முடியும் என கோயம்பேடு சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
 . 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?