சென்னையில் சிவப்பு தக்காளி சீசன்... வெதர்மேன் ட்வீட்!

 
வெதர்மேன்

 தமிழகத்தின் தலைநகர் சென்னை உட்பட பல பகுதிகளில் மாலைக்கு பிறகு மிதமான மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  "சென்னை , காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு  மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று முதல் மழை பெய்யத் தொடங்கும். இதை இந்த மாவட்டங்களுக்கு இது சிவப்பு தக்காளி சீசன் எனக் கூறலாம்.நகரி மலை அருகே  நிலத்தில் இருந்து கடற்கரையை நோக்கி காற்று வீசுகிறது.

வெதர்மேன்

அந்தப்பகுதியில் காற்று நகர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. எனவே இன்று மாலை முதல் சென்னையில் சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்யக்கூடும்" எனக் கூறியுள்ளார்.தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதலே வெயில் வாட்டி வதைத்தது.   அக்னி நட்சத்திரம் காலத்தில்  வெயில் கொடுமை அதிகமாகியது. குறிப்பாக மே மாதம் முழுவதும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு புழுக்கம் நிலவியது. கோடை மழை பெய்து குளிர்வித்த போதும் இந்த புழுக்கம் நீடித்ததால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.  இன்று காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது சென்னையில் மேக மூட்டத்துடன் மிதமான மழை பெய்து வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web