சாலைகளில் கொட்டப்படும் தக்காளி... கொட்டுது மழை... பறிக்கிற கூலியும் கிடைக்கலை... கதறும் விவசாயிகள்!

 
கிலோ 6 ரூபாய்!! பறிக்கிற கூலியும் மிஞ்சாது!! சாலையில் கொட்டப்படும் தக்காளி!

தக்காளி விலை திடீரென சரளமாக குறைந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலேயே கிலோ 5 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்பட்டு வருவதால், செடிகளில் இருந்து தக்காளியைப் பறிக்கிறதுக்கு கொடுக்கிற கூலி காசு கூட எங்களுக்கு கிடைக்கலை. இதுல பறிக்கிற கூலி, வண்டி கூலி எல்லாம்  கொடுத்து எங்கே நாங்க தக்காளியை விற்கிறது. எதிர்பார்க்காத நேரத்தில் இந்த நேரத்துல பெய்கிற மழையால செடிகளிலேயே தக்காளிகள் பாழாகுது என்று கதறுகிறார்கள் விவசாயிகள். இன்னும் சில இடங்களில், செலவு பண்ணி தக்காளியைப் பறிச்சாலும் நஷ்டத்துக்கு தான் விற்க வேண்டும் என்று விற்பனைச் செய்யாமல் சாலைகளில் தக்காளியைக் கொட்டும் அவலமும் நடந்தேறி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு காய்கறிகள் கொள்முதல் செய்யப்படும். இங்கிருந்து  சென்னையின் அனைத்து பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள ஊர்களுக்கும் காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. 

தக்காளி விலை உயர்வு

இதனால் காய்கறிகளின் விலையும் குறைவதும் வழக்கமே. அந்த வகையில் நடப்பாண்டில் கடந்த சில நாட்களாகவே சமையலில் அத்தியாவசிய தேவையான தக்காளி விலை குறைந்து வருகிறது. கடந்த 2 , 3 நாட்களாக அதிரடி வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பறிச்ச கூலி கூட மிஞ்சலையே என அங்கலாய்த்து வருகின்றனர். அந்த வகையில் இன்று கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ5க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

கிலோ 6 ரூபாய்!! பறிக்கிற கூலியும் மிஞ்சாது!! சாலையில் கொட்டப்படும் தக்காளி!

தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று ஒரு கிலோ தக்காளி, ரூ.க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடைகளில் தக்காளி விற்பனையாகாமல் தேங்கி நின்றதால், இன்று மேலும் விலை குறையவே வாய்ப்பிருப்பதாக வியாபாரிகல் தெரிவித்தனர்.  வகைகளின் விலையும் குறைந்திருக்கிறது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web