நாளை 2 மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு....!!

 
கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம்  மாநிலங்களில்  சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடியவுள்ளது. இதனையடுத்து  தற்போது அம்மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மிசோரம் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம்  டிசம்பர் மாதம் 17ம் தேதியும், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2024  ஜனவரி   3 ம் தேதியும் முடிவடைய உள்ளது.  மொத்தம் 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நாளை  நவம்பர் 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  

தேர்தல்

மொத்தம் 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில்  முதற்கட்டமாக 20 தொகுதிகளில் நாளை தேர்தல்  வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு  நவம்பர் 17ம் தேதி 2 ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.மிசோரம், சத்தீஸ்கர்   மாநிலங்களில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கும்   நிலையில், இந்த 2 மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் நேற்றோடு முடிவுக்கு வந்தது. மிசோரம் மாநிலத்தை  பொறுத்தவரை மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் என 2 முக்கிய கட்சிகள். இதில்  பாஜகவும் தனித்து உள்ளது. இருந்தாலும், 1987 முதல்  மிசோரம் மாநில அந்தஸ்து பெற்றுள்ளது.

தேர்தல்

அப்போது முதல்  நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ்  மட்டுமே மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. 
 2018ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை   மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது. சோரம்தங்கா மாநில முதல்வராக உள்ளார். மிசோ தேசிய முன்னணி மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இந்த முறை மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.
சத்தீஸ்கரை பொறுத்தவரை  காங்கிரஸ்  தலைமையிலான ஆட்சியில் முதல்வர் பூபேஷ் பாகேல்   ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ்   கட்சிகளிடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புக்களை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web