நாளை ஹெச்.டி.எஃப்.சி. வங்கிகளின் இணைப்பு அமலுக்கு வருகிறது! என்னென்ன மாற்றங்கள்?

 
எச்.டி.எஃப்.சி வங்கி

நாளை ஜூலை 1ம் தேதி ஹெச்டிஎஃப்சி வங்கியுடன் ஹெச்.டி.எஃப்.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவன இணைப்பு அமலுக்கு வருகிறது. வங்கிகளின் இந்த இணைப்பு தகவலை ஹெச்டிஎஃப்சி தலைவர் தீபக் பரேக் உறுதி செய்துள்ளார். இன்று ஜூன் 30ம் தேதி ஹெச்டிஎஃப்சி மற்றும் தனியார் வங்கியின் வாரியங்கள் கூடி இணைப்புக்கு ஒப்புதல் அளிப்பார்கள் என்று பரேக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இணைப்பு

எச்டிஎஃப்சி துணைத்தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான கெக்கி மிஸ்ட்ரி கூறுகையில், ஜூலை 13ம் தேதி முதல் கார்ப்பரேஷனின் பங்கு நீக்கம் அமலுக்கு வரும். இந்தியாவின் கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய பரிவர்த்தனை என்று அழைக்கப்படும், HDFC வங்கி கடந்த ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி, சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய உள்நாட்டு அடமானக் கடன் வழங்குநரை கையகப்படுத்த ஒப்புக் கொண்டது. இந்நிறுவனம் சுமார்  ரூபாய் 18 லட்சம் கோடி மொத்த சொத்துக்களைக் கொண்டிருக்கும்.

இணைப்பு

ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததும், HDFC வங்கி 100 சதவிகிதம் பொதுப் பங்குதாரர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும். மேலும் HDFCன் தற்போதைய பங்குதாரர்கள் வங்கியின் 41 சதவிகிதத்தை வைத்திருப்பார்கள்.

ஒவ்வொரு எச்டிஎஃப்சி பங்குதாரரும் அவர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு 25 பங்குகளுக்கும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் 42 பங்குகளைப் பெறுவார்கள் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web