நாளை விடுமுறை... ஊட்டியில் களை கட்டுது மலர் கண்காட்சி.. குவியும் பொதுமக்கள்!

 
உள்ளூர் விடுமுறை

நாளை மே 19ம் தேதி, ஊட்டியில் மலர் கண்காட்சி துவங்குவதையடுத்து, பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கலந்து கொள்வதோடு, உள்ளூர் மக்களும் அழகை ரசிக்க நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில், அனைவரும் குடும்பம், குடும்பமாக குவிந்து வருவதால், திணறுது ஊட்டி. அப்படி வருகின்ற சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க வருடந்தோறும் ஊட்டி, கொடைக்கானலில் கோடைக்காலத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த வருட மலர்கண்காட்சி ஊட்டியில் நாளை மே 19ம் தேதி மலர் கண்காட்சி துவங்குகிறது.

ஊட்டி

சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நிலையில், தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில்  ஊட்டி மலர் கண்காட்சி நாளை மே19ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது.  

இன்று ஊட்டி மலை ரயில் ரத்து!

இதற்காக பிரம்மாண்ட மேடை, அரங்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.  இதனை முன்னிட்டு உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்குவதையடுத்து நாளை மே 19ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web