நாளை ஆடி கிருத்திகை... திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு!

 
உள்ளூர் விடுமுறை
நாளை ஆடிகிருத்திகை திருவிழாவை  முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார். எனவே நாளை ஜூலை 29ம் தேதி திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி

முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் ஆடிக் கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்படும். பல மாவட்டங்களில் இருந்தும் திருத்தணி முருகனைத் தரிசிக்க அன்றைய தினம் பக்தர்கள் குவிவார்கள். இந்நிலையில், உள்ளூர் மக்களும் ஆடிக் கிருத்திகை விழாவில் கலந்து கொள்வதற்கு வசதியாக அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு செய்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார். 

திருத்தணி
ஜூலை 29ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 10ம் தேதி சனிக்கிழமை முழு பணி நாட்களாக செயல்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web