அட்சய திருதியை வழிபாடு... மறந்தும் இந்த தவறை செய்யாதீங்க!

 
அட்சய திருதியை

இன்று அட்சய திருதியை வழிபாடு செய்து வரும் நிலையில், மறந்தும் இந்த தவறை மட்டும் செஞ்சுடாதீங்க. இன்று நான் எந்த நல்ல காரியங்களைச் செய்தாலும், அது மேன்மேலும் வளரும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.

அட்சய திருதியை நாளில்‌ நாம்‌ வாங்கும்‌ பொருட்கள்‌ அந்த ஆண்டு ழுழுவதும் சிறந்த பெருக்கத்தை கொடுக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதன் அடிப்படையில் தான் இன்று நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. உங்கள் எண்ணத்தை தங்கத்தில் மட்டுமே செலுத்தாதீங்க. அட்சயம் என்றால் எடுக்க எடுக்க குறையாத பொருள் என்று அர்த்தம்.

மாமிசம்

இன்று காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்கிய நிலையில், அட்சய திருதியை நாளில் பொருட்களை வாங்குவது எந்தளவு அதிர்ஷ்டத்தை கொடுக்கின்றதோ அதே போன்று இந்த நாளில் தானம் செய்வதும் மிகச்சிறந்த பலன்களைத் தரும். சிரமத்தில் இருக்கும்  ஏழை மக்களுக்கு அட்சய திருதியையில் தானம் கொடுப்பதால் வருங்கால சந்ததியினர் நல்ல பலன்களை பெறுவார்கள் என்கின்றன  சாஸ்திரங்கள்.    
அட்சய திருதியை விஷ்ணு மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகின்றது. இந்நாளில் தவறியும் அசைவம் சாப்பிடுவதால்  மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். இதைச் செய்தால்  மகாலட்சுமியின் கோபத்துக்கு ஆளாகி  வாழ்வில் தீராத வறுமையை அனுபவிக்க வேண்டி வரும்.  அதே போல்  இந்நாளில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்த உணவை சாப்பிடக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.  வீடு வாசலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.  அசுத்தமான இடத்தில் மகாலட்சுமி குடியிருக்க மாட்டாள்.  அட்சய திருதியை நாள் விஷ்ணுவுக்கு உகந்த நாள் என்பதால் விஷ்ணுவுக்கு பிடித்த துளசி இலைகளை பறிக்கக்கூடாது.  

அட்சய திருதியை
காலை எழுந்ததும் குளித்து உடலையும் உள்ளத்தையும் சுத்தமாக  வைத்திருக்க வேண்டும். அதே  போல் பொறாமை, கோபம் , பழிவாங்கும் எண்ணத்தை தவிர்க்க வேண்டும்.  
இந்த நாளில் வாங்கும் தங்கம் அல்லது வெள்ளியை வாங்கியவுடன் அணிந்து கொள்வதை தவிர்த்து பெரியவர்கள் கையால் அர்ச்சனை செய்த பின்னரே அணிய வேண்டும். இதனை பின்பற்றினால் தான் அட்சய திருதியை நாளில் லட்சுமியின் ஆசீர்வாதத்தை பெற முடியும். இல்லாவிட்டால் வறுமை அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web