நாளை தந்தையர் தினம்... கொண்டாட்ட சில ஐடியாக்கள்!
நாளை உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தந்தையர் தினத்தை சிறப்பாக கொண்டாட சில யோசனைகள்...
நாளை உங்கள் தந்தையுடன் காலை உணவோடு தொடங்குங்கள், அவர் விரும்பும் வெளிப்புற சாகசத்தைத் திட்டமிடுங்கள்.
உங்கள் தந்தையுடன் நடைபயணம் செல்லுங்கள். மனம் விட்டு பேசுங்கள். அவர் விரும்பும் செயல்களைச் செய்ய வெளியில் ஒரு நாளைத் திட்டமிடுங்கள். இயற்கையில் உங்கள் தந்தையுடன் ஒன்றாக அமர்ந்து தரமாக நேரத்தை செலவிடுவது அவருக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். முடிந்தால் நாளைய தினம் உங்கள் செல்போனுக்கு விடுமுறை கொடுங்க. செல்போனையும், லேப்-டாப்பையும் பார்த்துக் கொண்டிருக்காமல் உங்கள் தந்தையுடன் நேரத்தை செலவிடுங்க.

உங்கள் நன்றியையும் அன்பையும் வெளிப்படுத்தும் வகையில் ஸ்கிராப்புக் அல்லது கையால் செய்யப்பட்ட அட்டை அல்லது ஏதேனும் கவிதை.. உங்கள் தந்தையைப் பற்றிய உங்கள் நினைவுகள், கருத்து, எண்ணம் போன்றவைகளை எழுதித் தரலாம். அது சிறப்பானதொரு பரிசாக இருக்கும். உங்கள் தந்தையை நீங்கள் பாதுகாப்பாக உணர்ந்த தருணம், நண்பராக நினைத்த தருணம்... உங்கள் தந்தையைப் பற்றிய உங்களது பெஸ்ட் கணிப்புகள்... உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் இடையேயான பெஸ்ட் சந்தர்ப்பங்கள் போன்றவைகளை லிஸ்ட் போடலாம். இது அவர் உங்களிடம் தொடர்ந்து அன்பாக இருக்கவும் நேரத்தை செலவிடவும் வரும் நாட்களில் உதவும்.

உங்கள் தந்தைக்கு வீட்டில் வழக்கமான வேலைகளில் இருந்து ஒரு நாள் ஓய்வு கொடுக்கவும். அவருக்கு நீங்கள் வீட்டிலேயே மசாஜ் செய்து விடலாம்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக நேரத்தை செலவிடுங்க. அதை விட மகிழ்ச்சியான தருணம் வேறு எதுவுமில்லை. ஒன்றாக அமர்ந்து கதைகள், நினைவுகளைப் பகிர்ந்து கொண்டாடுங்க.
சில சமயங்களில் தங்கு தடையின்றி ஒன்றாக நேரத்தை செலவிடுவதே சிறந்த பரிசு. மனதுடன் உரையாடினாலும், அந்தத் தருணங்களை ரசியுங்கள்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
