நாளை மகாளய அமாவாசை.. .இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
நாளை மகாளய அமாவாசை. முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்தவர்களுக்கு, பெற்றோர்களின் இறந்த தேதியை, திதியை மறந்தவர்களுக்கு மகாளய அமாவாசை என்பார்கள். ஒவ்வொரு மாதமும் திதி கொடுக்காவிட்டாலும் வருடத்திற்கொரு முறை வருகிற இந்த மகாளய அமாவாசை தினம் முக்கியமானது. பொதுவாக மாதந்தோறும் அமாவாசை திதி வரும் என்றாலும் 3 அமாவாசைகள் சிறப்பு வாய்ந்தவை.
ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை என இந்த 3 அமாவாசை தினங்களும் முக்கியமானவை. ஆடி அமாவாசை தினத்தில் பித்ருக்கள் பிதுர் லோகத்திலிருந்து பூலோகத்திற்கு கிளம்புவதாக ஐதீகம். அவர்கள் இந்த மகாளாய அமாவாசையில் பூலோகத்தை வந்தடைகின்றனர். மகாளய பட்ச காலத்தில் பூமியில் தங்கி இருந்து அருள் புரிவர். அதனால் அமாவாசை தினத்தில் வாசலில் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும். முன்னோர்களுக்கு திதி கொடுத்த பின் கோலமிடலாம். முன்னோர்களின் புகைப்படங்களுக்கு பூ சாற்றுவதைத் தவிர்த்து இந்த அமாவாசை தினங்களில் துளசி சாற்ற வேண்டும்.
அமாவாசை தினத்தில் கடன் கொடுக்க கூடாது
வீட்டு வாசல், பூஜை அறையில் கோலம் போடக்கூடாது. வெறுமனே தண்ணீர் தெளித்து விட்டால் போதுமானது.
முன்னோர்களை வழிபட்டு படையல் இட வேண்டும். காகத்திற்கு கட்டாயம் சோறு வைக்க வேண்டும்.
அசைவ உணவுகளை எக்காரணம் கொண்டும் சமைக்க, உண்ணக்கூடாது.
முன்னோர்கள் வீட்டுக்கு வரும் தினம். அவர்களை வரவேற்கும் வகையில் வீடு வாசல் சுத்தம் செய்ய வேண்டும். தலைமுடி, நகம் வெட்டக் கூடாது.
சாப்பிடுவதற்கு முன்னர் மூதாதையருக்கு பிடித்த உணவுகளை சமைத்து படைக்க வேண்டும். முன்னோர்களுக்கு உணவைப் படைக்கும் முன்பு, யாரும் சாப்பிடக் கூடாது. நாள் முழுவதும் விரதம் இருக்கலாம். அல்லது உணவு படைக்கும் வரை சாப்பிடாமல் இருந்து, விளக்கேற்றி, கற்பூர ஆராதானை செய்து பின்னர் சாப்பிடலாம்.காகம் என்பது முன்னோர்களின் அம்சமாகக் கருதப்படுகிறது.
எனவே வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடும் முன்பு, உணவை காகத்துக்கு படைக்க வேண்டும். சாதம், காய்கறி, குழம்பு ஆகியவற்றில் நெய் சேர்த்து காகத்துக்கு படைப்பது சிறப்பு. காகங்கள் அமாவாசை அன்று வைத்த உணவை சாப்பிட்டால், முன்னோர்கள் சாப்பிட வந்திருப்பதாக ஐதீகம்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!