நாளை நமதே.... ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம்... சசிகலா பரபரப்பு அறிக்கை…!!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு 10 நாட்களுக்கு அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும். அப்போதுதான் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும். 2017 க்குப் பிறகு தொடர்ந்து அதிமுக தோல்வியை சந்தித்து வருகிறது அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்காவிடில் அந்தப் பணிகளை நாங்களே மேற்கொள்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நயினார் நாகேந்திரன் அண்ணாமலை உட்பட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கோட்டையனின் உடம்பில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்பதை அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார். அதிமுக எந்த சக்தியாலும் அழிக்க முடியாத பேரியக்கம், ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம், நாளை நமதே எனக் கூறியுள்ளார். மேலும் அதிமுகவுக்கு கஷ்டங்கள் ஏற்பட்ட காலங்களில் செங்கோட்டையன் என அதனை வலிமையோடு எதிர்கொண்டதாகவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
