நாளை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி!! கோப்பையை வெல்லுமா இந்தியா?!

 
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி

 இந்திய நேரப்படி நாளை ஜூன் 7ம் தேதி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி   தொடங்க உள்ளது. இந்த போட்டியில்  இந்தியா -ஆஸ்திரேலிய அணிகள்   ஓவல் மைதானத்தில் மோதுகின்றன. நாளை ஜூன் 6ம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்க உள்ள  இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.   இதில் வெற்றி பெற  இரண்டு அணியினரும் ஒரு வாரத்திற்கு மேலாக  தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பட்டம் வென்று வரலாறு படைக்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கிடக்கின்றனர்.  

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி

இந்த  போட்டி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா  விடுத்த செய்திக்குறிப்பில்  பொதுவாக இங்கிலாந்தில் உள்ள சீதோஷ்ண நிலை பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சவாலானது.   இங்கு நிதானமாக விளையாடினால் மட்டுமே ரன்களைக் குவிக்க முடியும் .  நீண்ட நேரம் பேட்டிங் செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமே .   இங்குள்ள சீதோஷ்ண நிலையில் விளையாடிய பல தொடக்க ஆட்டக்காரர்களின் பேட்டிங்கில்  நிறைய பேர் ரன் குவித்ததையும் பார்த்து உள்ளேன்.  அவர்களின் ஆட்ட அணுகுமுறை வேறு. எனது ஸ்டைல் வேறு. ஆனால் அவர்கள் ரன் குவித்த விதத்தை தெரிந்து வைத்திருக்க முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். 

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி

ஓவல் மைதானத்தில் இதுவரை 104 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில்  இங்கிலாந்து அணி 43 போட்டிகளிலும், வெளிநாட்டு அணிகள் 23 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தில் டாஸ் வென்ற அணிக்கான வெற்றி வாய்ப்பு  34.62%.  முதலில் பேட் செய்யும் அணிக்கான வெற்றி வாய்ப்பு 35.58% .   டெஸ்ட் போட்டியின் முதல் 3  நாட்கள் அதாவது  நாளை ஜூன் 7, 8 மற்றும் 9  தேதிகளில் ஓவலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் 4   மற்றும் 5வது நாள் பிற்பகலும்  , மாலை நேரத்திலும் மழைப்பொழிவு இருக்கலாம் எனவும் தெரிகிறது. மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டால் 6வது நாள் ரிசர்வ் நாளாக அறிவிக்கப்படும்.  இந்த மைதானத்தில் டாஸ் வெல்வது மிகவும் முக்கியம்.  இந்திய அணி 1936 முதல் ஓவல் மைதானத்தில்  இதுவரை விளையாடிய 14 போட்டிகளில்  இந்தியா 2 வெற்றி, 5 தோல்வி மற்றும் 7 போட்டிகள் சமனில் முடித்துள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web