நாளை கடைசி தேதி... மாணவர்களே திருத்தம் செய்ய மறந்துடாதீங்க!

 
தேர்வு முடிவுகள்

நாளை ஜூன் 12ம் தேதி கடைசி தேதி. எனவே உங்கள்  மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்ய மறந்துடாதீங்க. அதன் பிறகு மதிப்பெண்களில் திருத்தம் செய்வது சாத்தியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2022-23ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  மாணவர்கள் படித்த பள்ளிகள் மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது 12, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்றிதழ்கள் இறுதி செய்யப்பட்டு உள்ளன.

அரசு தேர்வுகள் இயக்ககம்

தற்கால மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் செய்ய பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.  இதன்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், பொதுத் தேர்வுக்காக கொடுத்த பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி உட்பட தனிப்பட்ட தகவல்களில் திருத்தங்கள்,  பிழைகள் இருந்தால் அதனை திருத்திக் கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் படித்த அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் திருத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   சான்றிதழ்களில் திருத்தம் செய்து அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மதிப்பெண் சான்றிதழ்

மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்ட பிறகு அதில் திருத்தம் செய்யப்படாது என அரசு தேர்வுகள் இயக்ககம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மதிப்பெண் சான்றிதழில் புகைப்படம், பிறந்ததேதி என எதாவது திருத்தங்கள் இருந்தால் நாளைக்குள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு நிரந்தர மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்பட உள்ளது. இதனை மாற்ற இயலாது எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web