அதிர்ச்சி... ஏரியில் டன்கணக்கில் கொட்டப்பட்ட காலாவதியான ஐஸ்க்ரீம் டப்பாக்கள்!

 
கண்ணார்பாளையம் ஏரி

 பூந்தமல்லி  அருகே அமைந்துள்ள கண்ணார்பாளையம் ஏரி ஏறக்குறைய 300 ஏக்கருக்கும் மேலான பரப்பளவை கொண்டது. இந்த ஏரியில் சமீப காலமாக குப்பைகள் கொட்டப்பட்டு முறையான பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இனிவரப்போகும் மழைக்காலத்திற்கு தண்ணீரை தேக்க இடமின்றி  சுற்றியுள்ள தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள் சேகரிக்கும் குப்பைகள் மொத்தமாக இந்த ஏரியில் கொட்டப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

ஏரி
இந்நிலையில் தற்போது ஏரியின் கரையோரம் முன்னணி நிறுவனத்தின் காலாவதியான ஐஸ்கிரீம் பாக்கெட்டுகள் சட்டவிரோதமாக ஏரியில் கொட்டப்பட்டுள்ளன. இதனை அங்கு சுற்றித் திரியும் கால்நடைகள் சாப்பிடுகின்றன. ஐஸ்கிரீம்கள் திறந்தவெளியில் கொட்டப்பட்டுள்ளதால் அதில் மழைநீர் கலந்து ஏரியின் நீரில் கலந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏரியில் கொட்டப்பட்டுள்ள ஐஸ்கிரீம் பாக்கெட்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஏரியை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சி அலுவலகத்தை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள்  சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web