ரொம்ப ரொம்ப வரி குறைச்சல்... ட்ரம்ப் அறிவித்த இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் !

 
ட்ரம்ப் மோடி


அமெரிக்க அதிபர்  ட்ரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக  ஜூலை 1ம் தேதி தெரிவித்துள்ளார். அதில்  இரு நாடுகளின் நிறுவனங்களும் சமமாக போட்டியிடும் வகையில் “மிகக் குறைவான வரிகளை “ கொண்டதாக இருக்கும்.  இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை  ஜூலை 9, 2025 காலக்கெடுவிற்கு முன் முடிவு செய்ய, இந்திய பேச்சுவார்த்தைக் குழு வாஷிங்டனில் தங்கியுள்ளது.

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்  . ஏப்ரல் 2, 2025 அன்று இந்திய பொருட்களுக்கு 26% “பரஸ்பர வரி”  அறிவித்த டிரம்ப், 90 நாள் இடைநிறுத்தத்தை அறிவித்தார். இந்தியா, அமெரிக்காவின் வால்நட், பிஸ்தா, ஆப்பிள் போன்ற விவசாயப் பொருட்களுக்கு வரியைக் குறைத்து, ஆட்டோ பாகங்கள் மற்றும் எரிசக்தி துறைகளில் சலுகைகளை முன்மொழிந்துள்ளது.
விவசாயம் மற்றும் பால் பொருட்கள் தொடர்பான கோரிக்கைகளில் இந்தியா உறுதியாக உள்ளது. 2024-25ம் ஆண்டில் இந்தியா-அமெரிக்கா வர்த்தகம் 131.84 பில்லியன் டாலர்களாக உள்ளது. இதில் இந்தியாவுக்கு 45 பில்லியன் டாலர் வர்த்தக உபரி உள்ளது. இந்த ஒப்பந்தம், 2030ம் ஆண்டுக்குள் இரு நாடுகளின் வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர்களாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ட்ரம்ப் மோடி
ட்ரம்ப், இந்தியாவின் உயர் வரிகளை விமர்சித்தாலும், “முழு வர்த்தக தடைகளை அகற்றுவது” குறித்து பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்தியாவின் ஜவுளி, நகை, மருந்து துறைகள் இந்த ஒப்பந்தத்தால் பயனடையலாம் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?