ஆர்டர் புக்ல ரூ.81,784 கோடி... அள்ளி தரும் ஈவுத் தொகை... இந்த ஷேர் 52 வார உயர்வை எட்டியது!

 
விமான உதிரி பாகம் விமானம் ஏரோநாடிக்கல்

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், ஒரு முன்னணி உற்பத்தி நிறுவனமும், பொதுத்துறை நிறுவனமுமான தனது காலாண்டு முடிவுகள் மற்றும் மார்ச் 31, 2023ல் முடிவடைந்த ஆண்டிற்கான வருடாந்திர முடிவுகளை அறிவித்திருக்கிறது.

காலாண்டு முடிவுகள்: Q4FY22 உடன் ஒப்பிடும்போது Q4FY23 ல் EPS ரூபாய் 84.97 உடன் நிகர விற்பனை 8.10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2023ம் காலாண்டு நிகர லாபம் ரூபாய் 2,844.64 கோடியாக இருந்தது, இது 22ம் காலாண்டில் ரூபாய் 3,103.99 கோடியாக இருந்தது, இது 8.36 சதவிகிதம் குறைவுதான். ஆனால்  நிகர விற்பனை 9.37 சதவிகிதம் அதிகரித்துள்ளது மற்றும் நிகர லாபம் 14.25 சதவிகிதம் அதிகரித்து, 2022 -20223ம் நிதியாண்டில்  EPS  ரூபாய் 173.79 ஆக இருந்தது.

விமான உதிரி பாகம் விமானம் ஏரோநாடிக்கல் ஹால்

புதிய உற்பத்தி ஒப்பந்தங்கள், ROH மற்றும் உதிரி ஆர்டர்கள் ஆகியவற்றின் மூலம் நிறுவனத்தின் ஆர்டர் புத்தக நிலை ரூபாய் 81,784 கோடியாக பராமரிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களின் பணத்திலிருந்து தொடர்ந்து பட்ஜெட் ஒதுக்கீட்டின் மூலம் வங்கி இருப்பு நிலை ரூபாய் 20,306 கோடியாக கூடியுள்ளது. இந்நிறுவனம் 2022-2023 நிதியாண்டுக்கான 2வது இடைக்கால ஈவுத்தொகையான 200 சதவிகிதம் அதாவது ஒரு பங்கிற்கு ரூபாய் 20 என அறிவித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்புத் திட்டத்தில் ஹெச்ஏஎல் ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது, இது விமான உற்பத்தி மற்றும் அதன் பராமரிப்பு மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்ற ஒரே இந்திய நிறுவனமாக திகழ்கிறது.

விமான உதிரி பாகம் விமானம் ஏரோநாடிக்கல் ஹெலிகாப்டர்

புதன்கிழமை, எச்ஏஎல் பங்குகள் 2.29 சதவிகிதம் உயர்ந்தது அத்தோடு  புதிய 52 வார அதிகபட்சமாக ரூபாய் 3,168 ஆக உயர்ந்தது. ஆனால் நேற்று வியாழனன்று முடிவடையும் நேரத்தில், 1.24 சதவிகிதம் குறைந்து ஒரு பங்கின் விலை ரூபாய் 3094.10 என நிறைவு செயதது.

பங்குகளின் PE 15x மற்றும் ROE 30 சதவீதம் உள்ளது. இந்த பங்கு ஒரு வருடத்தில் 89.51 சதவிகிதமும், மூன்று ஆண்டுகளில் 498 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்கள் இந்த மல்டிபேக்கர் லார்ஜ் கேப் ஸ்டாக் மீது ஒரு கண்ணை எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web