மொத்தம் 1,73,905 இடங்கள்... இன்றே கடைசி தேதி... மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க!

 
கல்லூரி

தமிழகம் முழுவதுமாக உள்ள கல்லூரிகளில் மொத்தம் 1,73,905 கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. 12ம் வகுப்பு தேர்ச்சியடைந்த மாணவர்களே.. .மிஸ் பண்ணாதீங்க. இந்த கல்லூரிகளில் வரும் கல்வியாண்டுக்கான இளங்கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கு இன்று மே 22ம் தேதி திங்கட்கிழமை கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள கல்லூரியாக தேர்ந்தெடுங்கள். கல்லூரி வாழ்க்கை திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல சிறகடித்து பறப்பதற்கும், காதலித்து சீரழிவதற்கும், ஜாலியாக பொழுதைப் போக்குவதற்கும்  நிச்சயமாக கிடையாது. உங்கள் எதிர்காலத்தை வளமாக்குவதற்கான அடித்தளத்தை சரியாக திட்டமிடுவதற்கான அடிப்படையே கல்லூரி படிப்புகள். அதனால் கடைசி நேர பரபரப்பைத் தவிர்த்திடுங்க. சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். அதனால் மாணவர்களே மிஸ் பண்ணாம உங்க விண்ணப்பத்தை உடனே ரெடி பண்ணுங்க. 

கல்லூரி மாணவிகள்

இதற்கு முன்பாக தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க மே 19 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலைப் படிப்புகளில் 1,73905 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு http://www.tngasa.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் நடத்தப்பட்டது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். மறந்துடாம அப்ளை பண்ணிடுங்க. 

மாணவிகள்

அதன் பின்னர், மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் நாளைக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.மாற்றுத்திறனாளிகள் உட்பட சிறப்புப் பிரிவினருக்கான மாணவர்  சேர்க்கை மற்றும் கல்லூரி அளவிலான கவுன்சிலிங் மே 25ம் தேதி முதல் ஜூன் 20ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!