கழுகை வென்ற தாய் பாசம்.. கொடிய கழுகிடம் இருந்து குட்டியை போராடி காப்பாற்றிய முயல்!

 
முயல் - கழுகு

உணவுச் சங்கிலியில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் மற்ற உயிரினங்களை வேட்டையாட வேண்டும் என்பது இயற்கையின் விதி. ஆனால் அந்த விதிகளை மீறும் சக்தி அம்மாவின் அன்புக்கு உண்டு.  தாய் முயல் ஒன்று தனது குட்டியை வேட்டையாட வந்த கழுகை விரட்டியடிக்கும் வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவில், முயல் குட்டிகளை தூக்கிச் செல்ல கழுகு நீண்ட நேரம் அந்த இடத்தைச் சுற்றி வந்தாலும், தாய் முயல் தனது குட்டிகள் கைவிடப்படாமல் இருக்க தனது பின்னங்கால்களை தரையில் வைத்து கழுகைத் தன் முன் கால்களால் விரட்டியது. இறுதியில் தாய் முயலின் போராட்டத்தால் அந்த இடத்தை விட்டு  கழுகு சென்றது.

கழுகுக்கும் முயலுக்கும் பலத்தில் பெரிய வித்தியாசம் இருந்தும் தாய் முயல் தாய்மையின் வலிமையால் தன் குழந்தைகளைக் காப்பாற்றியது. சில நாட்களுக்கு முன்பு X இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 13 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும், பல பார்வையாளர்கள் தாய்மையின் துணிச்சலையும் சமயோசிதத்தையும் பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web