மக்களவை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி!

 
சந்திரபாபு நாயுடு நிதிஷ்குமார்
 

 

மக்களவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தயார் நிலையில் இருந்து வருகிறது.  அதே நேரத்தில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உட்பட  கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கண்டிப்பாக தேவை என்ற நிலை உருவாகியுள்ளது. 2 முறை பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பாஜக சபாநாயகர் பதவியை விட்டுத்தருவதில் பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.  இதில் முக்கியத்துவம் வாய்ந்த சபாநாயகர் பதவியை இருகட்சிகளும் கேட்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடு நிதிஷ்குமார்

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது டிடிபி பாலயோகிக்கு சபாநாயகர் பதவி அளிக்கப்பட்டதை சந்திரபாபு நாயுடு எடுத்துக்கூறியுள்ளார். அதே போல்   தெலுங்குதேசம் 16 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.ஆட்சியை தக்க வைக்க ஆதரவு கட்சிகளுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கப்படும் என  பாஜக தெரிவித்துள்ளது . இது குறித்த ஆலோசனைக் கூட்டம்  இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் டிடிபி, ஐ.ஜ.தளம் நிபந்தனைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web