கன்னியாகுமரியில் சுற்றுலாப் படகு சேவை தற்காலிகமாக ரத்து!
சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்வது கன்னியாகுமரி. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கன்னியாகுமரியில் கடல் நடுவே திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் படகின் மூலம் சென்று பார்வையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்ணாடி பாலத்தின் மூலம் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்து வருகின்றனர். காலையில் சூரிய உதயத்தை காண்பதற்காக வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றன. கன்னியாகுமரியில் சுற்றி பார்க்க பல்வேறு இடங்களில் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகை தருவது வழக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகை தந்த நிலையில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

படகு சேவைக்காக திரண்ட இருந்த சுற்றுலாப் பயணிகள் படகு சேவை நிறுத்தப்பட்டதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு திரும்பினால் படகு சேவை வழங்கப்படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் கடல் நீர் மட்டம் நிலையற்ற தன்மையில் இருப்பதால், விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
