சுருளி அருவியில் குளிக்க அனுமதி... சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

 
சுருளி அருவி


 
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் கடந்த 10 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். சுருளி அருவி சுற்றுலா மற்றும் ஆன்மீக ஸ்தலமாக இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.  


சுருளி அருவிக்கு மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள மேகமலை, மகாராஜாமெட்டு, இரவங்கலாறு, தூவானம் ஆகிய பகுதிகளில் தொடா் மழை பெய்து வந்தது. இதனால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 19 ம் தேதி முதல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.ஆடி அமாவாசையை முன்னிட்டு  வியாழக்கிழமை ஜூலை 24ம் தேதி  அருவியில் புனித நீராட பக்தர்களுக்கு வனத் துறையினா் அனுமதி வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்ததுள்ளனர்.

சுருளி


இதனையடுத்து  சுருளி அருவியில் நீர்வரத்து சற்று குறைந்த நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்த ஒரு சில மணி நேரத்தில் நீர்வரத்து அதிகரித்ததால் மீண்டும் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பொழிவு குறைந்து சுருளி அருவிக்கு நீர்வரத்து சீரானதால் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதையடுத்து காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் குளிக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?