குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்... அருவிகளில் உற்சாக குளியல்.. களைக்கட்டும் சீசன்!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அருவிகளில் நீர் வரத்து சீரான நிலையில், தற்போது சீசன் களைகட்டி உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். அருவிகளில் ஆரவாரமாக குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த காலத்தில் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதில் குளிப்பதற்காக தென்காசி மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இந்த ஆண்டுக்கான குற்றாலம் சீசன் தற்போது களைகட்டி உள்ளது. கடந்த சில நாட்களாக குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று வெயில் இல்லாமல் குளிர்ந்த காற்று வீசியது. மேலும் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் குற்றாலத்தில் குவிந்தனர்.
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் அவர்கள் ஆரவாரமாக குளித்து மகிழ்ந்தனர். அருவி பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பஜார் பகுதியில் உள்ள கடைகளிலும் வியாபாரம் சூடுபிடித்தது. வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!