குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்... குளு குளு சீசன் துவங்கியது!

தற்போது மெயின்அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் குளுமையான காற்றுடன் அவ்வப்போது சாரல் மழையும் விட்டுவிட்டு பெய்து வருகிறது.இதனால் குற்றாலத்தில் சீசன் களைகட்டி உள்ளது.

இதனால் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக கார்களிலும், வேன்களிலும் வந்தனர்.வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறுகளில் அந்த பகுதி முழுவதுமே போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மேலும் அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளதால் அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
