பெரும் சோகம்... டிராக்டர் கவிழ்ந்து கோர விபத்து... சிறுவர்கள் உட்பட 5 பேர் பலி!

 
டிராக்டர்

மத்திய பிரதேச மாநிலத்தில்  ஜபல்பூர் மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்  சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில்  தர்மேந்திர தாக்கூர் என்ற இளைஞர் திருமண நிகழ்வுக்கு டிராக்டரில் தண்ணீர் எடுத்து சென்றார். அவருடன் அதே கிராமத்தை சேர்ந்த 6 சிறுவர்கள்  இருந்தனர்.

விபத்து
திடீரென  டிராக்டர் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து ஏற்பட்டது . இந்த  விபத்தில் டிராக்டரை ஓட்டிச்சென்றவர் மற்றும் 4 சிறுவர்கள் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 சிறுவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  டிராக்டர் ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என  போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.  இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

பாகிஸ்தான் ஆம்புலன்ஸ்
இந்நிலையில் மத்தியப் பிரதேச முதல்வர் இந்த விபத்து குறித்து  “ஜபல்பூரில் டிராக்டர் கவிழ்ந்ததில் ஐந்து பழங்குடியின குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். அனைத்து குழந்தைகளுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க கலெக்டருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web