பாரம்பரிய நுங்கு வண்டி பந்தயம்.. சிறுவர்களுக்கு தங்க காசு பரிசு!

 
நுங்கு

அழிந்துவரும் பனைமரத்தின் பெருமை குறித்து இன்றைய இளைஞர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. அந்தவகையில், பாரம்பரிய நுங்கு வண்டி பந்தயம் நடத்தப்பட்டு அசத்தலான பரிசுகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பனை மரத்தின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிறுவர்களுக்கு நுங்கு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.

நுங்கு

இந்த போட்டியில் திருமயம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 10 வயது முதல் 12 வயதுடைய சிறுவர்கள் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி போட்டியில் 60 சிறுவர்கள் கலந்து கொண்டனர். போட்டி தொடங்கும் முன் பனைமரம் வளர்ப்பது மற்றும் பாதுகாப்பது குறித்த உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். போட்டி இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. ஒரு பிரிவுக்கு 30 சிறுவர்கள் என போட்டியில் கலந்து கொண்டனர். 

நுங்கு

சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை எல்லையாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி தொடங்கியது. இதில் சிறுவர்கள் அனைவரும் மிகவும் ஆர்வமாக சாலையில் நுங்கு வண்டி ஓட்டிச் சென்றனர். நுங்கு வண்டி போட்டியை சாலையில் இருபுறங்களிலும் நின்று ஆராவாரத்துடன் பொதுமக்கள் கண்டுகளித்து போட்டியில் பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தினர். இறுதியாக போட்டியில் வெற்றி பெற்ற கிருஷ்ணன் என்ற சிறுவனுக்கு ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! வீடியோ!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web