நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!! வாகன ஓட்டிகளே உஷார்!!

 
போக்குவரத்து மாற்றம்

தமிழகத்தின் தலைநகரமாம் சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் கோடம்பாக்கம் மேம்பாலப் பகுதியில் மெட்ரோ ரயில் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  "சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக, சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலை சந்திப்பில் இருந்து டாக்டர் அம்பேத்கர் சாலை சந்திப்பு வரை போக்குவரத்து மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை மே 6ம்தேதி  சனிக்கிழமை முதல் மே 12ம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு சோதனை அடிப்படையில் ஆற்காடு சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். 

போக்குவரத்து மாற்றம்
அதன்படி 
 ஆற்காடு சாலையில் யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலை சந்திப்பில் இருந்து டாக்டர் அம்பேத்கர் சாலை சந்திப்பு வரை போக்குவரத்து தடை 
 கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வரும் இலகு ரக வாகனங்கள் மற்றும் மாநகர பஸ்கள் நேராக டாக்டர் அம்பேத்கர் சாலைக்கு ஆற்காடு சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டு, மேற்கண்ட வாகனங்கள் யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலை, ரங்கராஜபுரம் பிரதான சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
வடபழனியில் இருந்து ஆற்காடு சாலை வழியாக கோடம்பாக்கம் மேம்பாலத்தை நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம்.
யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலையில் ஆற்காடு சாலை சந்திப்பில் இருந்து ஸ்டேஷன் வியூ சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் ஸ்டேஷன் வியூ சாலை சந்திப்பில் இருந்து நேராக ஆற்காடு சாலைக்கு செல்ல தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட வாகனங்கள் யுனைடெட் இந்திய காலனி 1வது பிரதான சாலை, 2வது குறுக்கு தெரு மற்றும் 2வது பிரதான சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.
விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் தியாகராயநகர் செல்ல ஸ்டேஷன் வியூ சாலை மற்றும் பசுல்லா மேம்பாலம் வழியாக சென்று இலக்கை அடையலாம்.

போக்குவரத்து
டாக்டர் அம்பேத்கர் சாலையில் ஒரு வழி பாதை ஆற்காடு சாலை சந்திப்பில் இருந்து 2வது அவென்யூ வரை தற்போது அமலில் உள்ளது. மேற்கண்ட சாலையில் ரத்தினம்மாள் தெரு சந்திப்பில் இருந்து ஆற்காடு சாலை சந்திப்பு வரை இருவழி பாதையாக மாற்றப்படுகிறது. ரத்தினம்மாள் தெருவில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் டாக்டர் அம்பேத்கர் சாலை, கார்ப்பரேசன் காலனி சாலை மற்றும் பாளையக்காரன் தெரு வழியாக ஆற்காடு சாலைக்கு சென்று அவர்கள் இலக்கை அடையலாம். 
இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web