வாகன ஓட்டிகளே உஷார்... இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!!

சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் தாம்பரம் மாநகர போக்குவரத்துக் காவல் துறையால் ஜிஎஸ்டி சாலை-சரவணா ஸ்டோர்ஸ் சந்திப்பு மற்றும் ஜிஎஸ்டி சாலை பல்லாவரம் நகராட்சி சந்திப்புகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இன்று நவம்பர் 09ம் தேதி வியாழக்கிழமை முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி புதிய போக்குவரத்து மாற்றங்கள்
ஜிஎஸ்டி சாலையில் பல்லாவரத்தில் இருந்தும் ரேடியல் சாலையிலிருந்தும் வரும் வாகனங்கள் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் சந்திப்பில் U Turn செய்து சென்னைக்கு செல்லவும். அதேபோல் தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி வரும் வாகனங்கள் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் சந்திப்பில் U Turn செய்து தாம்பரம் நோக்கி செல்லத் தடை.
பல்லாவரத்தில் இருந்து வரும் வாகனங்கள் MIT மேம்பாலம் வழியாக ஜிஎஸ்டி சாலை திரும்பி சென்னைக்கு செல்லலாம். தாம்பரம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை மேம்பாலம் சென்று திரும்பி மீண்டும் தாம்பரம் நோக்கி செல்லலாம்.
ஜிஎஸ்டி சாலையில் கிண்டி, பல்லாவரத்தில் இருந்தும் ரேடியல் சாலையிலிருந்தும் வரும் வாகனங்கள் பல்லாவரம் நகராட்சி சந்திப்பில் U Turn செய்து சென்னைக்கு செல்லவும், வலதுபுறம்
திரும்பி பல்லாவரம் நகராட்சி சாலைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி வரும் வாகனங்கள் பல்லாவரம் நகராட்சி சந்திப்பில் U Tum செய்து தாம்பரம் நோக்கி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்லாவரத்தில் இருந்து வரும் வாகனங்கள் MIT மேம்பாலம் வழியாக ஜிஎஸ்டி சாலை திரும்பி சென்னைக்கு செல்லலாம். தாம்பரம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் திருநீர்மலை மேம்பாலம் சென்று திரும்பி மீண்டும் தாம்பரம் நோக்கி செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!