வாகன ஓட்டிகளே இந்தப் பக்கம் போகாதீங்க... சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்!

 
போக்குவரத்து

 சென்னையின் பல பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நகரின் மையப்பகுதியும், வணிகப் பகுதியுமான திநகரில் சாலை மேம்பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை நாளை முதல் அடுத்தாண்டு ஏப்ரல் 26ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.  
இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி தொடங்கப்பட உள்ளது.  இதனையடுத்து நாளை ஏப்ரல் 27ம் தேதி  முதல் ஏப்ரல் 26, 2025 வரை ஒரு வருடத்திற்கு  போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.  

போக்குவரத்து மாற்றம்
வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 
வாகனங்கள் மேம்பாலம்  சர்வீஸ் சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராய சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம்.
பர்கிட் சாலை மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு மாநகரப் பேருந்துகளுக்கு  மட்டும் அனுமதி 
மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

போக்குவரத்து தடை
தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலைக்கு செல்ல  தெற்கு உஸ்மான் சாலை வழியாக  கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் 4வது பிரதான சாலை, சிஐடி நகர் 3வது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 
சிஐடி நகர் 1வது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம்.
தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டனாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம்.
இந்த ஏற்பாட்டிற்கு  வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறை  தெரிவித்துள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web