பிரபல இயக்குநர் வீட்டில் சோகம்... திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி!!

 
ஹரி

 
 
தமிழ் திரையுலக முண்ணனி இயக்குநர்களில் ஒருவர் ஹரி. இவர் தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாககொண்டவர். இவர்  காமர்ஸில் பட்ட படிப்பு படித்தவர். தமிழ் சினிமாவின் மேல் இருந்த காதலால்  , தூத்துக்குடியில் இருந்து வந்து இயக்குனர் செந்தில்நாதன், ஜீவபாலன், அமீர் ஜான், நாசர் உள்ளிட்ட பலரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.   நடிகர் பிரசாந்த் - சிம்ரன் நடிப்பில்   2002ல்   வெளியான 'தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 2003ல்  விக்ரம் - திரிஷா நடிப்பில், ஹரி இயக்கிய 'சாமி' திரைப்படம் சூப்பர் டூப்பர்  ஹிட்டடித்தது.  

ஹரி

இதைத்தொடர்ந்து இவர் இயக்கிய கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி, வேல், சேவல், சிங்கம் சீரிஸ்  படங்கள் அடுத்தடுத்து ஹிட் லிஸ்டில் சேர்ந்தன.  பொதுவாக இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் உருவாகும் படங்களில் கிராமத்து சாயல் இருக்கும். இது இவரின் தனி சிறப்பாகவும் பார்க்கப்படுகிறது. கடைசியாக தன்னுடைய மச்சினன் அருண் விஜயை வைத்து 'யானை' படத்தை இயக்கிய ஹரி, தற்போது விஷாலின் 34வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இவரின் தந்தை வி ஆர் கோபாலகிருஷ்ணன். இவர்  வயது மூப்பு காரணமாக  காலமானார். அவருக்கு வயது  88 .  இவரது மறைவு ஹரி - ப்ரீத்தா விஜயகுமாரின் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹரி
 வயது மூப்பு காரணமாக  கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார்.   இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு5 மகன்கள் மற்றும்  2மகன்கள்.   தூத்துக்குடியில் மளிகை கடை நடத்தி வந்தார்.   மகன் முன்னணி இயக்குனர் இடத்தை பிடித்த பின்னர் சென்னைக்கு வந்து தன்னுடைய மகன் - மருமகளுடன் வசித்து வந்தார். தற்போது இவரின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் இல்லத்தில் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு பிறகு  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊரான கச்சனாவிளைக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை  இறுதி சடங்குகள் செய்யப்ப்டும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web