கோவில் திருவிழாவில் சோகம்.. சீரியல் லைட் அறுந்து விழுந்து இருவர் பரிதாப பலி!

 
செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி கிராமத்தில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோயில் அருகே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி உருவ கட்அவுட்களை வைத்தனர். இப்பணியை அதே ஊரை சேர்ந்த சாமிகண்ணு மகன் ஐய்யப்பன் (20), ஒலி,ஒளி பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஜெயராமன் மகன் ஐய்யப்பன் (22) ஆகியோர் செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை செங்கம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது கட்அவுட்டில் உள்ள விளக்குகள் உடைந்துள்ளன. இதனால், ஜெஜயப்பன், எஸ்.ஐயப்பன் ஆகியோர் கட்அவுட்டில் ஏறி மின் விளக்குகள் பழுதடைந்ததை சரிசெய்ய முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக மின்விளக்கில் இணைக்கப்பட்டிருந்த மின் கம்பி அறுந்து இருவர் மீதும் விழுந்தது.

இதில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் தூக்கி வீசப்பட்டனர். உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், மின்சாரம் தாக்கி இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேல் செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web