அச்சச்சோ... அடுத்தடுத்து அதிர்ச்சி... கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி!

 
வசந்தி

சென்னை புழல் காவங்கரை குருசாந்தி நகரை சேர்ந்தவர் நிர்மலா(49). இவருக்கு சொந்தமான இரண்டு அடுக்குமாடி வீட்டில் சிலர் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இன்று காலை அவரது வீட்டின் கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, வீட்டின் உரிமையாளர் நிர்மலா அதே பகுதியை சேர்ந்த கணேசன்(65) என்பவரிடம் அதனை சரி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

வசந்தி

இதனையடுத்து கணேசன் பாடியநல்லூரை சேர்ந்த பாஸ்கர்(42), இஸ்மாயில்(37) ஆகிய இரு கூலித் தொழிலாளர்களை அழைத்து வந்து அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாஸ்கர், இஸ்மாயில் இருவரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கி இருவரும் உள்ளேயே மயங்கி விழுந்தனர். 

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர் நிர்மலா, உடனே இது குறித்து புழல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, போலீசார், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று பாதுகாப்பு உபகரணங்களுடன் தொட்டியில் இறங்கி இருவரையும் மீட்டனர்.

வசந்தி

ஆனால் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. பின்னர் இருவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து வீட்டு உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான பாஸ்கருக்கு வசந்தி என்ற மனைவியும், சேகர் என்ற மகனும் உள்ளனர். அதேபோல் இஸ்மாயிலுக்கு லத்தீபா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web