கேரளாவில் தொடரும் சோகம்.. மூளையை உண்ணும் கொடூர அமீபா வைரஸ்.. பலி எண்ணிக்கை 3- ஆக உயர்வு!

 
மிருதுல்

அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்ற அரிய நோய் தற்போது கேரளாவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்பது அமீபா நைக்லேரியா ஃபோலேரியால் ஏற்படும் மத்திய நரம்பு மண்டலத்தின் ஒரு அபாயகரமான தொற்று ஆகும். ஏழு ஆண்டுகளாக ஆறு பேரை மட்டுமே பாதித்த இந்நோய், தற்போது மாநிலத்தில் கடும் பிரச்னையாக மாறியுள்ளது. கேரள மாநிலம் இருமூளிபரம்பு பகுதியைச் சேர்ந்த அஜித் பிரசாத், ஜோதி தம்பதியின் மகனான மிருதுல் கோழிக்கோடு பரூக் மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

மூளையை உண்ணும் அமீபா

இவர் கடந்த வாரம் வாந்தி மற்றும் தலைவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ் தொற்று இருப்பதை உடனடியாகக் கண்டறிந்தனர். நோய்வாய்ப்படுவதற்கு முன்பு, அவர் குளத்தில் குளித்ததாகக் கூறப்படுகிறது, அதைத் தொடர்ந்து அதிகாரிகள் குளத்தில் குளிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். பாதிக்கப்பட்டவருக்கு தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிறுவன் உயிரிழந்ததாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி மே 21 அன்று இறந்தார், அதைத் தொடர்ந்து ஜூன் 16 அன்று கண்ணூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி இறந்தார்.மக்கள் அசுத்தமான நீர் அல்லது புதிய நீரில் நீந்தும்போது அமீபாஸ் மூக்கு வழியாக மூளைக்குள் நுழையும். மலப்புரத்தில் உள்ள கடலுண்டி ஆற்றில் குளித்த 5 வயது சிறுமிக்கும், வெவ்வேறு ஆறுகளில் இரண்டு குழந்தைகளுக்கும் நோய் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸின் உயிர்வாழ்வு விகிதம் மூன்று சதவீதம் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web