செல்போனால் விபரீதம்... விரைவு ரயில் மோதி கல்லூரி மாணவி பலியான சோகம்!

 
கிருத்திகா

இன்றைய இளசுகளின் கைகளில் ஆறாம் விரலாய் செல்போன் இருக்கிறது. சாலையைக் கடக்கையிலோ... பேருந்து பயணத்திலோ... ரயில் பயணத்திலோ... அட... டூ வீலர் ஓட்டிச் செல்லும் போது கூட செல்போனில் பேசியபடியோ அல்லது ஹெட்செட்டில் பாட்டு கேட்டப்படியோ தான் செல்கின்றனர். வீட்டிலும் தனி அறையில் சதா சர்வ காலமும் செல்போனுடன் தான் இருக்கின்றனார். அதிகளவிலான விபத்துக்களும், உயிரிழப்புகளும் இப்படி செல்போன் பயன்படுத்துவதால் என்கிறது ஓர் ஆய்வு. இந்நிலையில், செல்போனில் பேசியபடியே, ரயில் வருவதை கவனிக்காமல் இருந்த எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவி,  தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது அந்த வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மாணவியின் மீது மோதியதில் மாணவி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, தாம்பரம் அருகே புதிய பெருங்களத்தூரைச் சேர்ந்த மாணவி கிருத்திகா, செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார். புதிய பெருங்களத்தூரில் இருந்து தினமும் ரயிலில் பொத்தேரி வரைச் சென்று, கல்லூரியில் படித்து வந்த மாணவி கிருத்திகா,  வழக்கம் போல் நேற்று மாலை கல்லூரி முடிந்த நிலையில் வீட்டிற்கு திரும்புவதற்காக பொத்தேரி ரயில் நிலையம் வந்துள்ளார்.

train-suicide

அந்த சமயம் எழுப்பூரில் இருந்து காரைக்குடி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் வருவதை கவனிக்காமல் மாணவி கிருத்திகா, செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டே தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். வேகமாக சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில், இதில் மாணவி கிருத்திகா மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட கிருத்திகா பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தாம்பரம் ரயில்வே போலீசார், கல்லூரி மாணவி கிருத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கல்லூரி மாணவி கிருத்திகா செல்போனில் பேசியபடி ரயில் வருவதைக் கவனிக்காமல் தண்டவாளம் கடக்க முயன்ற போது ரயில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிய வந்துள்ளது. தங்களது ஒரே மகளை இழந்துள்ளதாக மாணவி கிருத்திகாவின் பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

Potheri

எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவ, மாணவிகள் பெருமளவில் பொத்தேரி ரயில் நிலையத்தை தாங்கள் கல்லூரி முடிந்து வீடு திரும்புவதற்காகவும், காலை நேரத்தில் கல்லூரிக்கு செல்வதற்காகவும் பயன்படுத்துகிறார்கள். இந்த ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்காதவாறு தடுப்புகளை அமைத்தும், ரயில்வே போலீசாரைப் பாதுகாப்புக்கு நியமிக்கவும் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல ஆண்டுகளாக இந்த கோரிக்கை கேட்பாரற்று கிடக்கிறது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web