9வயது சிறுமி 3வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி... விளையாடிக் கொண்டிருந்த போது சோகம்!

 
ஆஷியா

 மகாராஷ்டிரா மாநிலத்தில்  மும்பை சப் அர்பன் மாவட்டத்தில் கண்டிவாலி  பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 3 வது மாடியில் உள்ள வீட்டில்  சிறுவர் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.அதில் அஷயா என்ற சிறுமி ஜன்னலில் கிரிலில் சாய்ந்த வண்ணம் நின்றிருந்தாள். அவருடன் விளையாடிய  குழந்தைகளில் ஒருவர் தவறுதலாக அதை திறந்தார்.

மும்பை

இதனால் படுகாயம் அடைந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.    போலீஸ் அதிகாரிகள் இது குறித்து “ ஆஷியா மூன்றாவது மாடி குடியிருப்பில் கிரில் ஜன்னல் மீது சாய்ந்து கொண்டிருந்தார், அப்போது குழந்தைகளில் ஒருவர் தவறுதலாக அதை திறந்ததில்  ஆஷியா ஜன்னலுக்கு வெளியே விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் , அவசர சேவைகள் அழைக்கப்பட்டு விரைந்து ஆஷியா அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆம்புலன்ஸ்

மருத்துவக் குழு தீவிர சிகிச்சை அளித்தும் ஆஷியா சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோகமான சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைத் தீர்மானிக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் தடுக்கப்படுவதை உறுதி செய்யும் வகையிலும்  விசாரணை நடந்து வருகிறது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web