கணவன் கண் எதிரே சோகம்... மகளை வழியனுப்பி வைத்த பெண் அதே ரயிலில் சிக்கி பலி!

 
மகள்
 


மகளை ரயிலில் ஊருக்கு வழியனுப்பி வைத்த தாய், கணவன் கண் எதிரிலேயே அதே ரயிலில் சிக்கி பலியான சம்பவ பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையை சேர்ந்தவர் ஷாஜி. இவருடைய மனைவி மினி (42). இவர்களது மகள் நிமிஷா, சேலத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.

ஆம்புலன்ஸ்

இந்நிலையில் ஓணம் பண்டிகை விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த நிமிஷா விடுமுறை முடிந்த நிலையில் சேலத்துக்கு புறப்பட்டார். அவரை வழியனுப்பி வைப்பதற்காக மினியும், ஷாஜியும் கொட்டாரக்கரை ரயில் நிலையத்துக்கு சென்றிருந்தனர்.

ரயில் வந்தவுடன் மகளின் பேக் உள்ளிட்ட பொருட்களை வைப்பதற்காக, மினியும் ரயிலில் ஏறினார். அவர் பொருட்களை வைத்து கொண்டிருந்த போது ரயில் புறப்பட்டது. இதை எதிர்பார்க்காத மினி உடனே ஓடும் ரயிலில் இருந்து இறங்கினார். அப்போது தடுமாறி கீழே விழுந்து ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே கணவர் கண் எதிரே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். 

உத்தரபிரதேச போலீஸ்

இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் விரைந்து சென்று மினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொட்டாரக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொட்டாரக்கரை ரயில்வே போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?