படகு கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் 22 பேர் பலி!! பிரதமர் மோடி நிவாரணத் தொகை அறிவிப்பு!!

 
மலப்புரம்

கோடை விடுமுறை தொடங்கியதால், மக்கள் பலரும் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவருகின்றனர். அப்படி சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் கொடுத்துள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தனூர் ஒட்டம்பூர் துவால்திரா என்ற பகுதியில் பயணித்த சுற்றுலா படகு உள்ளது. இங்கு, நேற்று மாலை 7 மணியளவில் எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. விபத்துக்குள்ளான படகில் 30 பேர் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர்.


இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த சம்பவத்தில் 4 குழந்தைகள் உட்பட 22 பேர் பரிதாக உயிரிழந்தனர். படகில் பயணம் மேற்கொண்டவர்கள் அனைவரும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் அவர்களின் விவரங்கள் உறுதியாக தெரியவில்லை. படகு கவிழ்ந்து நீரில் மூழ்கிய சிலரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மலப்புரம்

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. உரிய அனுமதி பெறாமல் படகு இயக்கியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்றதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யாமல், பணம் பறிக்கும் நோக்கில் செயல்படும் இதுபோன்ற சுற்றுலா சேவைகளுக்கு தடை விதிக்க கோரிக்கை எழுந்துள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web