தூத்துக்குடியில் சோகம்.... கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

 
மீனவர்கள் இலங்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த அதிர்ச்சியாக மற்றொரு மீனவர் மூச்சுத் தினறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி பூபால்ராயபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் தாமஸ் மகன் கிரிஃபின் (26). இவர் நேற்று மதியம் 3 மணியளவில் திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் சக மீனவர்கள் 5 பேருடன் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளார். நள்ளிரவு 1 மணியளவில் 15 கடல் மேல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென கால் தவறி கடலுக்குள் விழுந்தார். 

இலங்கை மீனவர்கள்

உடனடியாக அவரை சக மீனவர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார். பின்னர் அவரது உடலை மீட்டு திரேஸ்புரம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மறைன் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முத்துமாரி சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் 

அதே போன்று தூத்துக்குடி மேட்டுப்பட்டி சாமுவேல் புரத்தைச் சேர்ந்தவர் அப்துல் காதர் மகன் காஜாமுகைதீன் (30), இவர் தூத்துக்குடி திரேஸ் புரத்தில் இருந்து நேற்று இரவு 5 மீனவருடன் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றார். சுமார் 10 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

உடனடியாக சக மீனவர்கள் அவரை கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் அதற்குள் உயிரிழந்து விட்டார். இது சம்பந்தமாக தூத்துக்குடி மரைன் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் ரெனிஸ் உடலை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!