பிறந்த நாளன்று விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சோகம்... கதறும் பெற்றோர்!

இன்று ரக்சிதாவின் பிறந்த நாள் என்பதால், தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக தனது வீட்டிற்கு வாடகைக் காரில் சென்றுக் கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை பெங்களூருவில் இருந்து சென்றுக் கொண்டிருந்த நிலையில், இவர்களது கார் விபத்திற்குள்ளானது. இதில் ஓட்டுநரின் இடப்பக்கம் அமர்ந்திருந்த ரக்சிதா படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவி ரக்சிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து நந்தி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த மாணவி உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய கார் ஓட்டுநர் நிஸ்வந்தை தேடி வருகின்றனர். பிறந்த நாளைக் கொண்டாட வந்த கல்லூரி மாணவி, விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!