தங்கம் விலை மீண்டும் உயர்வு... சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு!
இன்றைய காலை நேர விலை நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வின் மூலமாக ஒரு சவரன் தங்கம் ரூ.80 அதிகரித்து சவரன் ரூ.56,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் தொடர்ந்து 3வது நாளாக மாற்றம் ஏதுமில்லை.

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும் நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் ஒரு சவரன் தங்கம் ரூ.56,800க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.56,720க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.56,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.99க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
