கிறிஸ்துமஸ் இரவில் சோகம்... போதைப்பொருள் குறித்து புகாரளித்ததால் வெட்டி படுகொலை!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம், வர்கலாவில் கிறிஸ்துமஸ் இரவில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்ட்டார். வர்கலா தாழிவெட்டூர் சருவிளைச் சேர்ந்த ஷாஜகான் (60) என்பவர், போதைப்பொருள் பயன்படுத்தியதாக இளைஞர்கள் மீது புகார் அளித்ததற்காக வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக தாழவெட்டூரை சேர்ந்த ஷாகிர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.தாழவெட்டூர் தேவாலயம் அருகே 3 பேர் கொண்ட கும்பல் போதைப்பொருள் பயன்படுத்துவதாக போலீசாருக்கு ஷாஜகான் தகவல் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் பயன்படுத்த வந்த இளைஞர்கள் கும்பல் கத்தியால் குத்தி தாக்கியதில் பலத்த காயமடைந்த ஷாஜகானை திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அந்த பகுதியில் இருந்தவர்கள் கொண்டு சென்றனர். எனினும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. மற்ற குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!