விடுமுறை நாளில் சோகம்... அரசு உறைவிட பள்ளியில் தீ விபத்து... உடல் கருகி ஒரு மாணவர் பலி, 3 மாணவர்கள் படுகாயம்!

 
fire

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் பெரும் சோகமாக அருணாச்சலப் பிரதேச மாநிலம் ஷி-யோமி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அரசு உண்டு உறைவிடப்பள்ளி ஒன்றில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மாணவர் ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

சிறுவன் பலி

காயமடைந்தவர்கள், லுகி பூஜேன் (8), தனு பூஜேன் (9), மற்றும் தயி பூஜேன் (11) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் மேற்கு சியாங் மாவட்டத்தில் உள்ள பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

ஆம்புலன்ஸ்
அதே சமயம் பலியான மாணவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த கிராமத்தில் மின் இணைப்பு இல்லாததால், தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?